அவளை பற்றி வாசக அன்பர்கள் தெரிந்த கொள்ள சில தகவல்கள் இங்கே.
1 நீங்கள் நினைப்பது போல் அவள் ஒன்றும் மங்கம்மாவோ, மங்காத்தாவோ இல்லை. அவள் பெயர் மங்களாம்பிகை. அது சுருக்கி சுருக்கி (மங்கி மங்கி) "மங்கு" அன்று மாறி விட்டது.
2 பெயர் ராசியோ என்னவோ தெரியாது, அவள் எல்லாவற்றிலுமே கொஞ்சம் மங்கு தான்.
3 எல்லாரும் போல அவளும் பிறந்தாள், வளர்ந்தாள், எனக்கு வாழ்க்கைப்பட்டாள். எப்படியோ மங்குவின் அம்மா (என் மாமியார்) என் திருமணம் முன்பே இறைவனடி சேர்ந்து விட்டார். என் மாமனார் மட்டும் ஒரே பொண் ஒரே பொண் என்று சொல்லி கொண்டு எங்களோடு ஒட்டிக்கொண்டு விட்டார்.
4 மங்குவிற்கு கற்பனா சக்தி அபாரம். (நான் செல்போனில் யாரிடம் பேசினாலும், அது ஏதோ பெண்தான் என்று நினைத்து அதற்கொரு சண்டை நடக்கும்)
பொது அறிவு புலி:- நாட்டு தேசிய பறவை "காக்காய்" தான் என்று இன்றுவரை யார் கேட்டாலும் "டக்" என்று பதில் சொல்லும் திறமைசாலி
வீணாவாதவிதூஷினி- மன்னிக்கவும், விதண்டாவாத விதூஷினி
5 எல்லாரையும் போல சீரியல் பார்ப்பது, கிளப், வம்பு, அரட்டை, இதோடு நில்லாமல் அவ்வப்போது சமூக சேவை என்ற பெயரில் சில சித்ரவதைகள் இதுதான் இவள் பொழுதுபோக்கு
6 எல்லா சண்டையிலும் எப்படியாவது என் குடும்ப மனிதர்களை இழுத்து வந்து விடும் அளவிற்கு அடக்க குணம்.
(அடக்க முடியாமல் போகும் போது நான் அடங்கி விடுவேன்).
போதும் போதும் நிறைய தெரிந்து கொண்டால் உங்களுக்கு தலை பிரட்டும். இனி கதைகள் தான்...
Saturday, February 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment